tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்கிடுக

நாமக்கல், ஜூலை 6- கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடக்கோரி பொன்னி சர்க் கரை ஆலை முன்பு கரும்பு விவ சாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4  ஆயிரம் வழங்க வேண்டும். ஆலை களுக்கு கரும்பு வழங்கிய முறை யில்  நிலுவைத் தொகையை உடன டியாக  வழங்க வேண்டும். 2004-09 ஆம் ஆண்டு வரை லாபத்தில் தனி யார் சர்க்கரை ஆலைகள், விவசாயி களுக்கு அளிக்க வேண்டிய பங்குத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகேயுள்ள பொன்னி சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் கிளை தலைவர் ஏ.முத்து சாமி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள்  சங்க மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநில துணைத்தலை வர் செ.நல்லாக்கவுண்டர், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாராயணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பூபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;