tamilnadu

img

விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து உடுமலை, ஊத்துக்குளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, பிப். 14- மத்திய அரசின் விவசாய விரோத பட்ஜெட்டைக் கண் டித்து தமிழ்நாடு விவசாய சங் கத்தின் சார்பில் வெள்ளியன்று உடுமலை, ஊத்துக்குளியில் கண் டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச் சோளம் அறுவடை தொடங்கி யுள்ள நிலையில், ஏற்கனவே விவசாயிகளிடம் கொள்முதல் செய்த விலையை விட மிகவும் குறைவாக உள்ளதால் விவசாயி கள் கடுமையாகப் பாதிப்புக்குள் ளாகியுள்ளனர். எனவே, அனைத்து விவசாயிகளும் நலம் பெரும் வகையில் மக்காச்சோளத் திற்கு ஆதார விலையாக ரூபாய் மூவாயிரம் என அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். தென்னை மரங்களை பாதிக்கும் வகையில் உள்ள வெள்ளை ஈக்களை கட்டுப் படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன்க ளுக்கு கூடுதல் வட்டி வசூலிப் பதற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், விவசாயகளின் நல னைப் புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட் ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று உடுமலை வட் டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாய சங் கத்தின் உடுமலை ஒன்றியத் துணை தலைவர் அருண் பிர காஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனண், மாவட்ட துணை தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், உடுமலை ஒன்றிய செயலாளர் பாலதண்டபானி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளி

மத்திய அரசு தாக்கல் செய்தி ருக்கும் பட்ஜெட் விவசாயிக ளுக்கு எதிரானது என்று கண் டனம் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஊத்துக்குளியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாய சங்க ஊத்துக்குளி தாலுகா கமிட்டி சார்பில் வெள் ளிக்கிழமை ஊத்துக்குளி ரயிலடி, நிலவருவாய் ஆய்வாளர் அலுவ லகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் எஸ்.கோபாலகிருஷ் ணன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வெங் கடாசலம், தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றி னார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கே.வெங்கடாசலம், ஆர்.சுப்பிரமணியன், பால் உற் பத்தியாளர் சங்க தலைவர் எஸ்.கே.பழனிசாமி, வி.தொ.ச. தாலுகா தலைவர் ஆர்.மணியன் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.