tamilnadu

img

விவசாய நிலத்தில் பெட்ரோலிய நிறுவன குழாய் பதிக்கும் முடிவை கைவிடுக

தருமபுரி, ஜூலை 27- விவசாய நிலத்தில் பெட்ரோலிய நிறுவன குழாய் பதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என குறைதீர்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் எச்.ரஹமத் துல்லாகான், சார் ஆட்சியர் ம.பா.சிவன் அருள், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் இரா.கைலாசபதி, துணை இயக்குனர் எம்.இளங்கோவன், தோட்டகலை இணை இயக்குனர் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம்,  மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.சின்னராஜ் நிர்வாகிகள் ஆர்.சின்னசாமி, சக்திவேல் உள்ளிட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர்.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் எம்.ஆறுமுகம் பேசுகையில், பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனம் கோவை மாவட்டம், இருகூர் முதல் பெங் களூர் தேவனகுந்தி வரை விவசாய நிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலிய குழாய் பதிக்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நாகர்கூடல், சின்னம்பள்ளி, மாக்கனூர், சிடல காரம்பட்டி, ஓஜி அள்ளி, வள்ளூர், ஆண்டியூர், பூச்சிட்டியூர், பேடர அள்ளி, சோளகாப்பட்டி, பணை குளம், திருமல்வாடி, எர்ரண அள்ளி  ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பாரத்பெட்ரோலிய குழாய் பதிப்பது குறித்து விவசாயி களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளது. பாரத்பெட்ரோலிய குழாய்களை விவசாய நிலத்தில் அமைத்தால் விவ சாயிகளின் வாழ்வாதாரம் பறி போகும். எனவே இத்திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக கொண்டு செல்ல வேண்டும். பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சி கெண் டையன்குட்டை ஏரியில் கடந்த ஆண்டு குடிமராமத்துபணி துவக்கப் பட்டது. தற்போது இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே இந்த குடிமராமத்து பணியை உடனே செய்து முடிக்கவேண்டும் என பேசினார். இதனையடுத்து கூட்டத்தின் முடிவில்  விவசாய நிலங்களில் பாரத் பெட்ரோலிய குழாய் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.

;