சட்டப்பேரவை குழுவுக்கு மனு அனுப்ப கெடு
ஈரோடு, ஆக. 1- தமிழக சட்டபேரவை மனுக்கள் குழு ஈரோடு மாவட்டத் திற்கு விரைவில் வர உள்ளது. ஆகவே, தனி நபர்கள், சங் கங்கள், நிறுவனங்கள் தங்களது தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள், குறைகள் குறித்த மனுவின் ஐந்து நகல் களை, ஆக.16 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முக்கியத்துவம் வாய்ந்த, அரசு அலுவலகங்களில் பல ஆண்டாக தீர்க்கப்படாத பிரச்சனை, பொது பிரச்சனை, துறை சார்ந்த பிரச்சனைகளை கொண்டதாக மனுக்கள் இருக்க வேண்டும். சட்டப்பேரவை விதிகளின் வரம்புக்குள் இருக்கும் மனுக்கள் மட்டும், குழுவின் ஆய்வுக்கு எடுக்கப் படும். ஒரு மனுதாரர், பல மனுக்களை அனுப்பி இருந்தால், முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனு மட்டும் ஆய்வுக்கு எடுக்கப் படும். மனுதாரர், அவரது மனுவில் கையெழுத்திட்டு, தேதி குறிப்பிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை, சென்னை – 600 009 என்ற முகவரிக்கு ஆகஸ்டு 16 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கோவையில் மில் அதிபர் வீட்டில் ரூ.2.17 கோடி கொள்ளை - ஒருவர் கைது
கோவை, ஆக. 1- மில் அதிபரின் வீட்டில் இருந்த சுமார் 2 கோடியே 17 லட் சம் ரூபாய் மதிப்புள்ள வைரம், தங்கம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோவை, பந்தய சாலை பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ் எத்திராஜ். இவர் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகி றார். இவர் வீட்டுப் பணியாளரான ஜார்கண்ட் மாநிலத் தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் ராய் என்பவரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் விட்டு தனது குடும்பத் துடன் பெங்களூரு சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் பெங்களூரிலிருந்து புதனன்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் பொருட்கள் அனைத்தும் களைந்த நிலையில் இருப் பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பிரகாஷ் குமார் வீட்டில் இல்லாததை அறிந்து சந்தேகத்துடன் பாதுகாப்பு பெட்டகத்தை சோதனை செய்தார். அதில், தங்கம் மற்றும் வைர நகைகளும், 17 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருப்பதையறிந்து பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். திருடப்பட்ட பொருட் களின் மொத்த மதிப்பு 2 கோடியே 17 லட்சம் ரூபாய் இருக்கும் என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரகாஷ்குமார் பீரோவில் இருந்த நகை கள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்ற காவல் துறையினர் அம்மாநில காவல்துறையினரின் உதவியுடன் அவரை கைது செய்தனர். இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கோவைக்கு அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.