மழைநீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன்படுத்தும் கட்டமைப்பு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஈரோடு, செப்.11- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மழை நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீரா கப் பயன்படுத்துவதற்காக அமைக்கப் பட்டுள்ள கட்டமைப்பை மாவட்ட ஆட்சி யர் சி.கதிரவன் பார்வையிட்டார். பருவ மழை துவங்க உள்ளதால் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் சேமிக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாந கராட்சிப் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள், கான்கீரிட் வீடுகள், ஓட்டு வீடுகளில் எவ்வாறு மழை நீர் சேமிக்க வேண்டும் என மாதிரிகள் அமைத்து விளக் கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் மொட்டை மாடியில் சேகரமாகும் மழை நீரை குழாய் வழியாகக் கொண்டு வந்து அவற்றை சுத்திகரித்து 2 ஆயிரம் லிட்டர் கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பி குடிநீராகப் பயன்படுத்த மாநகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதே போல், மாநகராட்சியின் புதிய கட்டடத் தின் மொட்டை மாடியில் சேகரமாகும் மழை நீரை சேமிக்கும் வகையில் தரைப் பகுதி யில் 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதொட்டி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்த மழை நீர் சேமிப்பு கட்டமைப்பை ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பார்வையிட்டார். அப்போது, மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், செயற் பொறியாளர் விஜயகுமார் ஆகியோரிடம் மழை நீர் சேகரிப்பு குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
திருப்பூர் , செப்.11 – திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து புதன் கிழமையன்று அலாரம் தொடர்ந்து ஒலித்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈஸ்வரன் கோயில் வீதியில் ஐசிஐசிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரம் உள்ளது. இங்கு புதன் கிழமை திடீரென தொடர்ந்து அலாரம் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தெற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். காவலர்கள் உடனடியாக அங்கு வந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரங்களின் ஒயர்களை ஒரு நபர் பார்த்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் அவர் பெருந்துறையை சேர்ந்த லோகேஸ்வரன் என்பதும், தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களுக்கான சர்வீஸ் எஞ்சினியர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரது நிறுவனத் தில் இவர் கொடுத்த தகவல்களை சரி பார்த்தபோது, உண்மையான விபரங்கள் என்பது உறுதிப்படுத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து நகர்ப்பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களுக்கான மாதாந்திர பரிசோதனை செய்ய வரும்பொழுது வங்கிக்கு உரிய தகவல் கொடுத்து வருமாறு அவரை எச்சரித்து காவலர்கள் அனுப்பி வைத்தனர்.