உடுமலை, ஆக.2- அரசு துறையில் ஒய்வு பெற்றவர் களுக்கு வேலை வழங்கும் அரசா ணையை ரத்து செய்து, இளைஞர் களுக்கு வேலை வழங்க வேண்டு மென அரசு ஊழியர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மடத்துகுளம் வட்ட மாநாடு வியாழனன்று வட்ட தலைவர் முகமது இசாக் தலைமையில் அரிமா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறை யில் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்யக்கூடாது. அரசு அலுவலகங்க ளில் அடிப்படை வசதிகளை ஏற்ப டுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த மாநாட்டில் வட்டக்கிளை யின் புதிய தலைவராக முகமது இசாக், செயலாளராக முருகசாமி, பொருளாள ராக சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து மாவட்ட செயலாளர் அம்சராஜ் பேசினார்.