tamilnadu

img

மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் - முன்னேற்பாட்டுகள் தீவிரம்

மேட்டுபாளையம், நவ. 30- கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யத்தில் உள்ள பவானியாற்று கரையோ ரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமி டத்தில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாமுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இங்கு நடைபெற்ற 48 நாள் நலவாழ்வு முகாமில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்பட்டு வரும் 33 யானைகள் பங்கேற்றன. கடந்த ஆறாண்டுகளாக தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வந்த நிலை யில் ஏழாம் ஆண்டும் இப்பகுதியிலேயே முகாமை நடத்த தமிழக அரசு முடிவெ டுத்துள்ளது.  இதனையடுத்து வழக்கமாக முகாம் நடைபெறும் பவானியாற்றுப் பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 30க்கும் மேற்பட்ட யானைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இவற்றை கட்டி வைக்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டு வரு கின்றன. மேலும் முகாமில் உள்ள யானை கள் காலை, மாலை என இரு நேரங்களில் நடைப்பயிற்சிக்கு கொண்டு செல்லப்படும் என்பதால் அதற்கான பகுதிகள், யானைகள் மற்றும் அதன் பாகன்களுக்கான உணவு தயாரிப்பு மற்றும் தங்குமிடங்கள், மின் விளக்குகள், முகாமை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணி கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அற நிலையத்துறை அறிவித்துள்ளது.