சேலம், டிச.3- சேலம் மாவட்டம் வன உயிரியல் பூங் காவில் செவ்வாயன்று யானை மிதித்து பாகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தின் பிரசிதி பெற்ற சுற் றுலா தளமாக குரும்பப்பட்டி வன உயி ரியல் பூங்கா விளங்குகிறது. இந்த வன உயி ரியல் பூங்காவில் யானை, மான், வெள்ளை மயில், முதலை, பாம்பு, பறவை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை கள்ளழகர் கோவி லில் இருந்து கடந்த 2009ஆம் ஆண்டு ஆண்டாள் என்ற யானை பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானையை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த காளி யப்பன் என்பவர் பராமரித்து வந் தார். யானைக்கு வயது முதிர்ச்சி காரணமா கவும், பார்வை குறைபாடு காரணமாகவும் பூங்காவில் வைத்து பராமரிக்க முடிய வில்லை. இதனால் திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்ப மாவட்ட வனத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. இந்நிலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை யானையின் உடல் நலம் குறித்து பரி சோதனை செய்யப்படுவது வழக்கம். இதற்காக மருத்துவ பரிசோதனை செய் வதற்காக வனத்துறை கால்நடை மருத்து வர் பிரகாஷ் தலைமையில் மருத்துவர்கள் செவ்வாயன்று யானைக்கு பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது யானை, மருத்துவரை தாக்கியுள்ளது. இதை யடுத்து யானையை பராமரித்து வந்த பாகன் காளியப்பன் யானையை கட்டுப்படுத்தி சமாதான படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் யானைக்கு திடீ ரென்று மதம் பிடித்ததால், கட்டுப்படுத்த முயற்சித்த பாகனை யானை தாக்கி மிதித் தது. இதில் காளியப்பன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும்,இந்த யானை மதுரை கள்ளழகர் கோவிலில் மூவரை தாக்கி கொன் றுள்ளது. மேலும் 2013ஆம் ஆண்டு வன உயிரியல் பூங்காவில் பத்மினி என்கிற பெண்ணை தாக்கியதில் அவர் உயிரிழந் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.