tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில் சேலத்தில் நீட் உதவி மையங்கள்

சேலம், மே 5-சேலத்தில் நடைபெற்ற நீட் தேர்விற்காக வருபவர்களுக்கு உதவிடும் வகையில் நீட் உதவி மையங்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டன.சேலத்தில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வழிகாட்டஆறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீட் உதவி மையங்களை அமைக்கப்பட்டது. மேலும், புதிதாக வரும் மாணவர்களுக்குதேர்வு மையத்தை அடையாளம் காணவும் அவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தரும் வகையிலும்பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சேலம் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் உதவிமையங்களை அமைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உதவி புரிந்தனர்.இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், மாநகரமேற்கு செயலாளர் எஸ்.சிலம்பரசன், தலைவர் ஜெகன், பொருளாளர் கண்ணதாசன், மாநகர வடக்கு செயலாளர் ஆர்.வி.கதிர்வேல், தலைவர் சதீஷ் குமார், மாநகர கிழக்கு செயலாளர் பெரியசாமி, தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.