திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி குற்றச்சாட்டு
சேலம், நவ.5- ஒருபுறம் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பதும், மறு புறம் தமிழ்குறித்து பேசுவது என் பது பாஜகவின் இரட்டை வேடம் என திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்காவில் மனித நேய சங்கத்தின் சார்பில் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது பெற்ற திரா விடர் கழக தலைவர் கீ.வீரமணிக்கு சேலத்தில் பாராட்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர் கள் சந்திபில் கூறியதாவது, தமிழகம் பெரியார் மண், இதில் எப்படியா வது காலூன்ற பாஜகவும், ஆர்எஸ்எஸ்-சும் துடிக்கிறது. இத னால் அவர்கள் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கின்ற செய லையும், அதனை நியாயப்படுத்து கிற செயலிலும் ஈடுபடுகிறார்கள். மத்தியில் காவிக் கூட்டம் ஆட்சி யில் இருப்பதால், தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் அவர் களுக்கு தலையாட்டி பொம்மை களாக செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், வள்ளுவர் எந்த மதத் தினையும் சார்ந்தவர் அல்ல. வள் ளுவர் சிலையை அவமதித்து அதன் மூலம் திராவிட இயக்கங் களை கோபப்படுத்தி கலவ ரத்தை ஏற்படுத்த நினைக்கிறார் கள். அதேநேரம், இதுகுறித்து தமிழக முதல்வர் கண்டனம்கூட தெரிவிக்காமல் உள்ளார். மோடி வித்தைகளில்தலை சிறந்த பல வித்தை உண்டு. அதில் தற்போது பல இடங்களில் தமிழை குறிப் பிட்டும், திருக்குறள், புறநானூறு போன்றவற்றை எடுத்துரைத்து உரையை தொடங்கி பேசி வருகி றார். ஆனால் திருவள்ளுவர் சிலையை ஒருபக்கம் அவமதிப் பது, இன்னொரு பக்கம் தமிழ் குறித்து பேசுவது என பாஜகவினர் இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம்சாட்டினார். முன்னதாக, இந்த பாராட்டு விழாவில் திமுக மாவட்ட செய லாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. இராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் எ.மோகன், காங் கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், விசிக மாவட்ட துணை செயலாளர் காயத்ரி, திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.