tamilnadu

img

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்களை தூர்வார கோரிக்கை

கோவை, நவ. 16 – சுகாதார சீர்கேடும் மற்றும் துர்நாற்றம் வீசும் சாக்கடை கால்வாயை தூர்வார எஸ்ஐஎச்எஸ் காலனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை சிங்காநல்லூரை அடுத்துள்ள 52 ஆவது வார்டு எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சாக்கடை கால்வாய் கழிவுகள் கடந்த பல மாதங்களாக முறையாக அப்புறப்படுத்தப்படாததால் அப்பகுதி முழுவதும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவது டன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தற்போது மழைக் காலம் துவங்கியுள்ள நிலையில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சுற்றியுள்ள அனைத்து வீடுகளுக்குள் புகும் அபா யம் உருவாகியுள்ளது.  அதேநேரம், இப்பிரச்சனை குறித்து பலமுறை மனு  அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்தவொரு பலனு மில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கால்வாயை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.