tamilnadu

img

ஏழைகளின் மருத்துவர்- டாக்டர் அண்ணாஜி

சேலம் மாவட்டம், தேவூர் எனும் கிராமத்தில் ஒரு பிரபலமான செல் வந்தர் குடும்பத்தில் 30.09.1909ல் பிறந்தவர் டாக்டர் அண்ணாஜி. பள்ளி  மாணவராக இருந்தபோதே 1930ம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட் டத்தில் பங்கெடுத்தார். இதனால் பிரிட்டிஷ் காவல் துறையின் கொடிய தாக்குதலுக்கும், ஒரு வருட சிறை தண்டனைக்கும் ஆளானார். இதன் பின் 1934ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில்  சேர்ந்து மருத்துவம் படித்தார். மருத்துவரான பிறகு லலிதா என்ப வரை திருமணம் செய்துகொண்டு அவருடன் தேச விடுதலைப் போராட் டத்தில் பங்கெடுத்தார். 1940ம் அண் டில் நாடெங்கும் நடந்த தனிநபர் சத் யாகிரகத்தில் துனைவி லலிதாவுடன் இணைந்து பங்கெடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயே அரசு லலிதாவை வேலூர் பெண்கள் சிறை யிலும், அண்ணாஜியை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தது. சுமார் 9 மாத சிறைவாசத்தில் அண்ணாஜி,  அவருடன் சிறையில் அடைக்கப்பட்டி ருந்த கம்யூனிஸ தோழர்களான பி.சீனி வாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோருடன் விவாதித்து ஒரு பொது வுடைமை சிந்தனையாளராய் வெளி யில் வந்தார். துணைவியாருக்கும் பொதுவுடமைக் கொள்கைகளை போதித்து அவரையும் கம்யூனிஸ் டாக்கினார்.

 பின்னர் கிருஷ்ணகிரி மாவட் டத்திலுள்ள காவேரிப்பட்டிணம் பகு தியில் தனது மருத்துவ சேவையை ஆரம்பித்தார். காவேரிப்பட்டிணம் பகுதியில் இருந்த மிட்டாதாரர்களும் உயர்சாதி ஆதிக்க சக்திகளும் விவசாயிகளையும், விவசாயக்கூலி களையும் கொடுமையாக அடக்கி சுரண்டிக் கொண்டிருந்தது கண்டு மனம் பதைத்தார். விளைச்சலில் பெரும் பகுதியினை மிட்டாதாரர்கள் அபகரித்துவிட பெரும் வறுமையில் விவசாயிகள் விழிபிதுங்கி நின்றனர். இந்த கொடுமை தீர உறுதி மிக்க விவசாயிகளின் சங்கமே ஒரே தீர்வு  என்ற அடிப்படையில் முதல் முதலாக காவேரிப்பட்டிணம் ராமபுரம் பகுதி யில் 1942-ம் ஆண்டு அண்ணாஜியால் விவசாய சங்கம் கட்டப்பட்டது. “தமிழகத்திலேயே முதன் முதலில் ஸ்தாபன ரீதியில் விவசாயிகளை அணிதிரட்டிய பெருமை டாக்டர் அண் ணாஜியையும், அவர் மனைவி லலி தாவையுமே சாரும்.” சுமார் ஆறு மாதத்துக்கும் மேலாய் நடந்த விவ சாயிகளின் போராட்டம் வெற்றியுடன் முடிந்தது. 

இதனையடுத்து இயக்க நடவ டிக்கையில் தொடர்ந்து தீவிரமாகப் பங்கெடுத்த அண்ணாஜி 1947 அதிகார மாற்றத்தின்போது பாதுகாப்பு கைதி யாய் சிறை வைக்கப் பட்டார். இவ்வாறு விவசாய சங்கத்தி லும், பொது வுடைமை இயக்கத்தி லும் முக்கிய பங்காற் றிய அண்ணாஜி முன்னுதாரணமான மருத்துவராகவும் திகழ்ந்தார். மருத்து வப்பணியில் அவரின் தியாகம் தன்னிகரற் றது. 1940களின் துவக் கத்தில் நாடெங்கும் பரவிய காலரா நோய்க்குப் பலர் பலியாயினர். டாக்டர் அண்ணாஜி வீடுவீடாகச் சென்று  இலவசமாக வைத்தியம் பார்த்தார். உறவினர்களே செல்லத்தயங்கிய தென்பென்னை ஆற்றங் கரையிலி ருந்த பிளேக் முகாமுக்கு கம்யூனிச இயக்க தோழர்களுடன் சென்று இறந்தவர்களை அடக்கமும் செய்தார். 

இதைத்தொடர்ந்து மக்கள் மருத்துவமனை என்ற பெயரில் தான் நடத்தி வந்த மருத்துவமனையை 1985 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி யிடம் ஒப்படைத்தார். தனது வாழ் நாள் முழுவதுமே அரையணாவுக்கும் காலணாவுக்கும் வைத்தியம் பார்த்த  அண்ணாஜி 1992ம் ஆண்டு மறைந் தார். ஆனால், இன்றும் ஏழை, எளிய மக்களுக்கு மிகக் குறைந்த கட்ட ணத்தில் அம்மருத்துவமனை சேவை யாற்றி வருகிறது.