tamilnadu

img

சேலம் அருகில் ஜல்லிக்கட்டுப் போட்டி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம், ஜன.17- சேலம் மாவட்டம், கூலமேட்டில் சனி யன்று (ஜன.18) நடைபெறவுள்ள  ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு  பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன்  வியாழனன்று நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார்.  சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூல மேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன் னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,  சேலம் மாவட்டம், கூலமேட்டில் சனி யன்று சேலம் மாவட்டத்தின் இந்த ஆண்டிற் கான முதல் ஜல்லிக்கட்டு நடைபெற வுள்ளது. இதனை முன்னிட்டு ஜல்லிக் கட்டு நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல்துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர்  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு தேவையான  பாதுகாப்பு ஏற்பாடுகளை  காவல்துறையினரும்,  ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான தடுப்பு வேலிகள்,  பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வை யாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்பு கள் அமைத்தல் உள்ளிட்ட  பணிகளை பொதுப்பணித் துறையினரும் ஆய்வு  செய்து தகுதி சான்று மற்றும் அமரும்  பார்வையாளர்களின் எண்ணிக்கையை  நிர்ணயித்து தர நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.  மேலும், சுகாதாரத்துறையினர் மாடு பிடி வீரர்களின் உடற்கூறு தகுதியை சான்றிதழ் செய்வதோடு, போதுமான மருத்துவர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி போன்றவற்றை ஏற்பாடு  செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகள் குடி நீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.தீபா காணிகர், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை மரு.புருஷோத்தமன்,  ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் எம்.துரை, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.நிர்மல்சன், ஆத்தூர் வரு வாய் வட்டாட்சியர் பிரகாஷ், கூலமேடு ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஏ.கந்தசாமி, ஜல்லிக்கட்டு கண் காணிப்புக் குழுவினர் மற்றும் தொடர் புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

;