tamilnadu

பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள தடை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை, ஜூன் 9 -  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை யாக கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட் டுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக்கொண்டே வருகிறது. இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் தற்போது வரை 161 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, 68 நாட்கள் ஊரடங்கிற்கு பின் சில தளர் வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை பந்தய சாலை யில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோ ரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்ளும் பலர் முக கவ சம் அணிவது இல்லை எனவும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்பதையும் உணர்வதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மறு அறிவிப்பு வரை கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி பயணம் மேற் கொள்ள தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கோவையில் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரி வித்த அவர், கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து ள்ளது எனவும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

;