tamilnadu

img

நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணி

சேலம், நவ.22- சேலத்தில் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி வெள்ளியன்று நடை பெற்றது.  உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு  தினத்தையொட்டி  சேலம் வாசன் ஐ கேர்  ஹாஸ்பிடல் சார்பில் சேலம் இந்திய  மருத்துவர் சங்க அலுவலகம் முன்பு இருந்து  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைமை  அதிகாரி மருத்துவர் சி.செல்வகுமாரி  தலைமை தாங்கினார். மருத்துவர்கள்  என்.ஆனந்தி,ஆர்.ராஜேஷ் கண்ணன்  ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.  சேலம் மாநகர போக்குவரத்து துணை  ஆணையர் சத்திய மூர்த்தி பங்கேற்று பேரணியை துவக்கிவைத்தார். பேரணியில்  நீரழிவு நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.