tamilnadu

img

டெங்கு மற்றும் காயச்சல் தடுப்பு ஆலோசனை கூட்டம்

தருமபுரி, அக்.21- பாலக்கோட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் திங்களன்று நடை பெற்றது. தருமபுரி மாட்டம், பாலக்கோடு வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் உ.கெளரி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தென் மேற்கு பருவமழை துவங்க உள்ளது. இதனால் கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் குளம், குட்டை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் செடி கொடி கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக பரவி டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க ஒவ்வொரு ஊராட்சியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேலும், தீவிர டெங்கு மற்றும் காய்ச்சல்  தடுப்பு பணியாக நெகழிப் பொருள்கள், டயர்கள், தேவையற்ற பொருள்களில் மழைநீர் தேங்குவதை அப்புறப்படுத் தும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிகளில் குளோரின்கலந்த குடிநீர் விநியோகிப்பது, கிராமங்களில் ஒவ்வொரு சனியன் றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்களை  நடத்த வேண்டும் என்று பேசினார். இக்கூட்டத்தில் மணடல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சாக்ரடீஸ், ஹாதீம், கமலா, தாரா, சுகாதார, அலுவலர்கள் ஏ.சேகர், நாகராஜ், ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;