tamilnadu

img

கண்வலி விதை விலை நிர்ணயம் செய்ய தாமதம்

சாகுபடி பரப்பை குறைத்த விவசாயிகள்

தாராபுரம், செப். 6 - தாராபுரம் வட்டாரத்தில் கண் வலி விதை விலை நிர்ணயம் செய்ய தாமதமானதால் சாகுபடி பரப்பை விவசாயிகள் குறைத்துள்ளனர். தாராபுரம் தாலுகாவிற்குட் பட்ட மூலனூர், கொளத்துப் பாளையம், உச்சனவலசு, கரை யூர், பொன்னிவாடி, நல்லாம் பாளையம், பழனிக்கவுண்டன் வலசு, புதுப்பை உள்ளிட்ட பகு திகளில் கண்வலி சாகுபடி சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு வரை கண்வலி விதை கிலோ ரு.3ஆயி ரத்து 500க்கு தனியார் வியாபாரி கள் கொள்முதல் செய்து வந்தனர். நல்ல விலை கிடைத்ததின் எதி ரொலியாக கடந்த ஆண்டு சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கண்வலி சாகுபடி செய்யப்பட் டது.  இந்நிலையில் பனி மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக பூக்கள் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக இடுபொருள் செலவும் அதிகரித்தது. அறுவடைக்கு முன்பு வறட்சி நிலவியதால் வேறு வழியின்றி விவசாயிகள் லாரி  தண்ணீர் வாங்கி பயிரை காப் பாற்றினார்கள். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என அறு வடை செய்தனர். ஆனால் அறு வடை செய்து 3 மாதங்கள் ஆகி யும் தனியார் வியாபாரிகள் தங்க ளுக்குள் சிண்டிகேட் அமைத்து ரூ.ஆயிரத்து 900 லிருந்து ரூ.2 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்தனர். இந்த விலை விவ சாயிகளுக்கு இழப்பை ஏற்படுத் தும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் நல்லவிலை கிடைக் கும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்துள்ளனர். இதற்கிடையில், கண்வலி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அமைக்கப்பட்டு குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கவேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், வட்டிக்கு வாங்கி பயிர் செய்த நிலையில், கொள்முதல் செய்ய தாமதமாவதால் வட்டி கட்ட இயலாமல் தவித்து வரு கின்றனர். வழக்கமாக ஆடி மாதம் கண்வலி கிழங்கை விவசாய நிலங்களில் நட்டு, ஆவணி மாதத் தில் செடிகள் வளர்ந்த பிறகு, கம்பி வலை அமைத்து, செடிகளை மேலே கொடி படர ஏற்பாடு செய்வார்கள். இந்தாண்டு இந்த பணி பரவலாக நடந்து வருகிறது. எனினும் விலை நிர்ணயத்தில் தாமதம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு சாகுபடி பரப்பு 8 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளது.  முன்னதாக, இப்பகுதி விவ சாயிகளுக்கு கண்வலி பயிரும், முருங்கைக்காய் சாகுபடியும்தான் கைகொடுத்து வந்தது. தற்போது முருங்கை விலையும் கிலோ ரூ.10 ஆக குறைந்துள்ளதால் விவ சாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.