தாராபுரம், செப். 22 - உடுமலை அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாராபுரம் வந்தது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்தையடுத்து அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியாக உயர்ந் தது. அமராவதி அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாச னத்திற்காகத் தினசரி 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட தமிழகமுதல்வர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 20 ஆம் தேதி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்தாராபுரம் வந்தடைந்தது. புதிய அமராவதி பாசன வாய்க்கால்களுக்கு 450 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் கடைமடை பகுதியான கரூர் சென்ற டைந்ததும். பழைய அமராவதி பாசனத்திற்கு வாய்க் கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படும் எனத் தெரிகிறது.