அவிநாசி, ஆக.1- அவிநாசி பேரூராட்சி 11ஆவது வார்டில் அடிப் படை வசதிகள் செய்து தரு மாறு வியாழனன்று சிபிஎம் சார்பில் பேரூராட்சி அதி காரியிடம் மனு அளிக்கப் பட்டது. அவிநாசி பேரூராட்சிக் குட்பட்ட 11ஆவது வார்டில் உள்ள கஸ்தூரிபாய் வீதி யில் சாக்கடையோரத்தில் உள்ள குடிநீர் குழாயை மாற்றியமைக்க வேண்டும். பழுதடைந்த தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும்.பழுதடைந் துள்ள சாலையை செப்பனிட வேண்டும். பொதுக்கழிப்பிடம் அருகில் உள்ள சாக்கடையை தூய்மை செய்ய வேண்டு மென என வலியுறுத்தி வியாழ னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி வடக்கு கிளையின் சார்பில் பேரூ ராட்சி அதிகாரியிடம் மனு அளிக்கப் பட்டது. இம்மனுவை பெற்றுக் கொண்ட அதி காரிகள், சாலையை செப்பனிடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் விரைவில் நிறை வேற்றப்படும் என தெரிவித்தார். முன்ன தாக, இம்மனுவினை அளிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.கனகராஜ், ராஜ், வடக்கு கிளை செயலாளர் ரமேஷ், பேரூ ராட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் ஆர்.வேலுச்சாமி, வி.தேவி மற்றும் வாலிபர் சங்க நிர்வாகி செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..