கோவை, ஜூலை 24– தியாகி சீரபாளையம் ராக்கியண்ண னின் 63 ஆம் ஆண்டு நினைவுதினம் புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின ரால் அனுசரிக்கப்பட்டது. கோவை மதுக்கரை ஒன்றியத்திற் குட்பட்ட சீரபாளையத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த விவசாய தொழிலா ளர்கள் கடும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆதிக்க சாதியை சேர்ந்த நிலப்பிரபுக்கள் நடத்திய இத்தாக் குதலை எதிர்த்து பேசமுடியாத நிலையில் இருந்த அம்மக்களை ஒன்றுதிரட்டி செங் கொடியேந்தி ராக்கியண்ணன் போராடி னார். இவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்க உழைத்திட்டார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி ஆதிக்கவாதிகள் சீரபாளையம் ராக்கி யண்ணனை கடந்த 1957 ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்தனர். தலித் அருந்ததிய மக்களின் உரிமைக் கான போராட்டத்தில் உயிரை தியாகம் செய்த தியாகி ராக்கியண்ணனின் நினைவு தினத்தை ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து அனுசரித்து வரு கிறது. இதன்ஒருபகுதியாக புதனன்று தியாகி ராக்கியண்ணனின் 63 ஆம் ஆண்டு நினைவு தினம் சீரபாளையம் தியாகி கள் மேடையில் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கட்சியின் மதுக்கரை ஒன்றிய செய லாளர் பி.ரவிச்சந்திரன் தலைமையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கொடிகளை தலைவர்கள் ஏற்றிவைத்தனர். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, ஏஐடியுசி மாவட்ட தலை வர் ஆர்.ஏ.கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.தேவராஜ், சி.சிவசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து தியாகி ராக்கியண்ணன் குடும் பத்தினருக்கு புத்தாடைகளை வழங்கி தலைவர்கள் கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தலைவர் வி.பி.இளங்கோவன், சிபிஎம் தெற்கு நகர செய லாளர் கே.நாகேந்திரன் மற்றும் கே.அய்யா சாமி, எஸ்.சி.சண்முகம், எம்.பஞ்சலிங்கம் ஆகியோரும் சிபிஐ சார்பில் சி.வி.சுப்பிர மணியம், கே.ஆர்.தங்கராஜ், ஏ.கிருஷ்ண சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். முன்னதாக தியாகி ராக்கியண்ணன் நினைவாக மதுக்கரை ஒன்றியப்பகுதி முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்ப லப்படுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற் றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.