திருப்பூர், ஜூலை 3 - திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை பற்றி ஆட்சியரிடம் அளித்த அடுக்கடுக் கான புகார் மனுவுக்கு, சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொறுப் பில்லாமல் அலட்சியமாக பதில் அளித்திருப்பதாக புகார் அளித்த மனுதாரர் கூறியுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் கடந்த ஜூன் 17ஆம் தேதி அரசு மருத்துவமனை குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவத் துறை இணை இயக்குநருக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பரிந்துரைத் திருந்தார். அந்த மனுதாரர் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வருகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு தாரா புரம் சாலை பெரிச்சிபாளையம் தலைமை மருத்துவமனை வளாகத் துக்கு மாற்றப்பட்டு ஓராண்டு ஆகிறது. மருத்துவக்கல்லூரியாக மாற்றவும், மருத்துவர்கள் பணி களை ஒருங்கிணைக்கவும் இந்த மாற்றம் செய்வதாக தெரிவித்தனர். ஆனால் அங்கு மருத்துவர்களின் பணியில் முன்னேற்றம் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை புரியும் வகையில் தகவல்கள் சொல்வ தில்லை. மருத்துவர் எழுதிக் கொடுக்கும் சீட்டில் மருத்துவர் பெயர், பதிவு எண் இருப்பதில்லை. வெளி நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை ஆய்வுக்கூடம் பாதுகாப்பின்றி கிடங்கு போல் உள்ளது. ஆய்வு முடிவுகள் வழங் கவும் தாமதிக்கப்படுகிறது. ஆய்வு முடிவுகள் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுக்கிறார்கள். உடல் தொடர்பான பல ஆய்வு கள் தனியார் பரிசோதனை மையங் களில் எடுத்துவரச் சொல்கிறார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். அதனால் அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் மருத்துவர்கள், செவி லியர்கள் பணியில் அமர்த்த வேண்டும். இருதயம், தலைக் காயம் போன்றவற்றிற்கு உடனடி யாக சிகிச்சை மற்றும் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து அடுத்த கட்ட சிகிச்சை அளிக்க போதிய மருத்து வர்கள், மருத்துவ உபகரணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். விபத்து, எலும்பு முறிவு என்றால் 15 நாட்கள் கழித்துத்தான் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்து வழங்கும் இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக் கிறது. கூடுதல் மையங்கள் திறந்து மருந்தாளுநர்கள் நியமிக்க வேண்டும். நகரின் மையத்தில் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு உத விடும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடர வேண்டும் என கேட்டிருந்தார். இதற்கு பொதுசுகாதாரத்துறை இணை இயக்குநர் கோமதி பதில் மனு அளித்திருந்தார். அதில், ’புகார் மனுவில் விவரங்கள் தெளிவாக இல்லை’,அலைபேசி எண்ணும் தெரிவிக்கவில்லை. மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள இயலாது எனத் தெரிவித்துள்ளார். நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வந்து சிகிச்சைபெறும் அரசு தலைமை மருத்துவமனை செயல் பாடு பற்றி நேரடியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்த மனுவுக்கே சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலட்சியமாக பதில் அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்ப தாக மனுதாரர் தெரிவித்தார். சுகா தாரத்துறை அதிகாரிகள் எந்தளவு அலட்சியமாக உள்ளனர் என்ப தற்கு இந்த சம்பவமே ஒரு சான்று என்றும் மனுதாரர் கூறியிருக்கிறார். (ந.நி)