tamilnadu

img

கோவை காந்திபுரம் கிராஸ்-கட் சாலை மூடல்

கோவை, ஜூலை 21-  கொரோனா தொற்று காரணமாக கோவை காந்திபுரம் நான்காவது வீதி முதல் பத்தாவது வீதி வரை இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. கோவையில் மிக முக்கிய பகுதியான காந்திபுரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள், பிரிண்டிங் உள்ளிட்ட பல வகையான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள 2  மற்றும் 3 ஆவது வீதியில் வசிப்போருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி மூடப்பட்டது. இதன்தொடர்ச்சியாக அதிகரிக்கும் பாதிப்புகளால் தற்போது காந்திபுரம் 4வது வீதியிலிருந்து 10வது வீதி வரை யாரும் வாகனத்தில் செல்ல முடியாதபடி சாலைகள் மறைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அப்பகுதியில் செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் விற்பனை கடைகள் வரும் சனிக் கிழமை வரை மூடப்படுவதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ள னர். இதனால் பரபரப்பாக காணப்படும் கோவை கிராஸ் கட் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

;