tamilnadu

img

சிஐடியு சாலைப்போக்குவரத்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஜூலை 23- ஈரோடு மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு)எட்டாவது மாவட்ட மாநாடு ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. மாணிக்கம் கொடியேற்றினார். மாநாட் டிற்கு சங்கத்தின் துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். சம்மேளன பொது செயலாளர் எஸ்.மூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். சிஐடியு துணை தலைவர் பி.சுந்தரராஜன், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர் வாகி ஆனந்தன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலை வர் பாலு என்கின்ற மோகன சுந்தரம்ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  இம்மாநாட்டில் சங்கத்தின் புதிய தலைவராக பி.செல்வ ராஜ், பொது செயலாளராகபி.கனகராஜ், பொருளாள ராக எஸ்.தனபால் உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். 20 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்ரமணியன் பேசினார்.