தருமபுரி, அக்.23- மின்வாரியத்தில் காலிப்பணியிடங் களை நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் ஐடிஐ படித்த 2900 பேர்களுக்கு கள உதவியாளர்களாக நேரடி நியமனம் மூலம் எடுப்பதாக கூறி ஓர் ஆண்டுக்கு மேலாகியும் நியமனம் செய்ய வில்லை. எனவே உடனடியாக தமிழக அரசும், மின்வாரியமும் நியமன நடவ டிக்கை எடுக்கவேண்டும். ஐடிஐ படித்து மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வேண்டும். மின்வாரியத்தில் ஐடிஐ படித்தவர்களை பணிக்கு எடுக்கும் போது வயதுவரம்பை தளர்த்தி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி் சிஐடியு தமிழ்நாடு மின்ஊழி யர் மத்திய அமைப்பின் சார்பில் தருமபுரி மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவல கம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.லெனின்மகேந்திரன் தலைமை வகித்தார். வேலூர் மண்டல செயலாளர் எம்.கோவிந்தராஜ், மாநிலச்செயலாளர் ஜோதிமணி, மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, பொருளாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் ஜி.பி.விஜியன், தருமபுரி கோட்டச் செயலாளர் ஜி.சக்தி வேல்,எம்.ஆர்.டி. கோட்டத் தலைவர் வி. சீனிவாசன், இணைச் செயலாளர் கோபி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசி னார்.சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.நாக ராஜன், மாவட்டச்செயலாளர் சி.நாகரா சன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரூர் கோட்ட துணைத் தலைவர் பி.குமரவேல் நன்றி கூறினார்.