சிஐடியு, விவசாய சங்கங்கள் ஆவேசம்
கோவை, செப்.6– போராடிப்பெற்ற உரிமை களை பறித்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண் டித்து கோவையில் சிஐடியு மற் றும் விவசாய சங்கங்களின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்தியில் மோடி அரசு இரண் டாவது முறையாக அதிகாரத் திற்கு வந்த பிறகு முன்னைக் காட்டிலும் தீவிரமாக பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு களை விற்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துபோகச் செய்வது, விவசாய நிலங்களை பறித்து கார்ப்ரேட்டுகளுக்கு வழங்குவது, நூறுநாள் வேலை திட்டத்தை முடக்குவது என தொடர்ந்து தொழிலாளர், விவ சாய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் சிஐ டியு, விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் வியாழனன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆர்.கேசவமணி தலைமை தாங்கினார். தமிழ் நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஆர். செல்வராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாநில துணை தலைவர் எஸ். ஆறுமுகம் மற்றும் கே.மனேக ரன், கே.ரத்தினகுமார், என்.பால மூர்த்தி, வி.பி.இளங்கோவன், என்.சிவராஜ், ஆனைமலை துரை சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசு களின் மக்கள் விரோத, தொழி லாளர் மற்றும் விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண் டித்து முழக்கங்களை எழுப்பினர்.