திருப்பூர், மே 29 -திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் முத்தூர் அருகில் உள்ள கரட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் குழந்தைகள் உலகம் என்ற பாலர் அரங்க கிளை அமைக்கப்பட்டது.கதை சொல்லி வளர்ப்போம் குழந்தைகளை என்ற தலைப்பில் சங்கத்தின் செயலாளர் க.காளியப்பன், சங்கத் தலைவர் அ.பிரபு செபாஸ்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கச் செயலாளர் எஸ்.தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு கதைகள் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக பாண்டிச்சேரியில் நடைபெற்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூடி கலைஇலக்கிய செயல்பாட்டை, பாலர் அரங்கத்தை விரிவாக்கவும் திட்டமிடப்பட்டது. நாடக ஆசிரியர் பாக்கியதாசன் நன்றி கூறினார்.