tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி

சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 

சேலம் சிபிஎம் மாவட்ட குழு அலுவலகம் முன்பு உள்ள காரல்மார்க்ஸ் சிலைக்கு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், எம்.குணசேகரன், எ.ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், பி.பாலகிருஷ்ணன், என்.பிரவீன்குமார் மற்றும் பி.தங்கவேலு ஆகியோர் உள்ளனர்.

சேலம், ஜன.3-  சேலம், நாமக்கல், தருமபுரி மாவட் டங்களில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சிபிஎம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.27 மற்றும் 30ஆம் தேதி களில் நடைபெற்றது. இதில்  சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி  ஒன்றியம் சன்யாசி பட்டி அக்ரஹாரம்  ஊராட்சி மன்ற தலைவராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர் வெற்றி பெற்றார். கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றி யத்தில் கீழ் நாடு ஊராட்சி மன்ற தலை வராக எம்.விஜயசாந்தி வெற்றி பெற் றார். எடப்பாடி ஆடையூர் ஊராட்சி 7 ஆவது வார்டு உறுப்பினராக நீலா வதி, ஆவடிபேரூர் கீழ்முகம் 10ஆவது வார்டு உறுப்பினராக வேலுமணி, வீர பாண்டி ஊராட்சி ஒன்றியம் மார மங்கலத்துபட்டி ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினராக செல்வி மற்றும்  13ஆவது வார்டு உறுப்பினராக பூங் கோதை ஆகியோர் வெற்றி பெற்று  உள்ளனர். சேனை பாளையம்  ஊராட்சியின் 3ஆவது வார்டு உறுப் பினராக ஞானசேகரன்,  நங்கவள்ளி  ஊராட்சி ஒன்றியம் ஆவடத்தூர் ஊராட்சியின் 2ஆவது வார்டு உறுப்பினராக வெங்கடேஷ் ஆகி யோர் வெற்றி பெற்றனர். கல்வராயன் மலை வடக்கு  நாடு ஊராட்சி 2ஆவது வார்டு உறுப் பினராக பாக்கியராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் காட்டு வேப்பிலை பட்டி ஊராட்சி வார்டில் சரவணன், சங்ககிரி  சன்யாசி பட்டி அக்ரஹாரம் ஊராட்சி  1ஆவது வார்டில் கனகமணி முத்து சாமி,  4ஆவது வார்டு வெண்ணிலா  சுகுமார், 9ஆவது வார்டில் பேபி  முருகனும் வெற்றி பெற்றனர். 3 ஆவது வார்டில் பழனியம்மாள்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். 

நாமக்கல் 

நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு ஒன்றியம் ஆண்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஏ.ஆதிநாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊராட்சி  மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டி யிட்ட சிபிஎம் வேட்பாளர்கள் ஏ.எஸ்.சரவணன், எஸ்.கலையரசி, எம்.தீபா, டி.பாக்கியம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  எலச்சிபாளையம்  ஒன்றியம் 5 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. சுரேஷ் போட்டியிட்டார். இவர் அதிமுக வேட்பாளரை விட 769 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் அதிமுக தொடர்ந்து 25 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த நிலையில், சிபிஎம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. இதேபோல் அனிமூர் ஊராட்சி பொம்மக்கல்பாளையம்  வார்டு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சிவக் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனங்கூர் ஊராட்சி அண்ணா நகர்  வார்டு உறுப்பினராக எம்.நாகராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சித்தாளந் தூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக சகுந்தலா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என திருச்செங்கோடு ஒன்றியச் செய லாளர் ஆர்.வேலாயுதம் தெரிவித் துள்ளார்.   

தருமபுரி

தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் ராதிகா தேர்வு செய்யப்பட்டார் இவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 703 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்  18ஆவது வார்டு ஒன்றிய குழு உறுப்பி னராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.சர்க்கரை வேல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  வேட்பாளரை விட 133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் 5 ஆவது வார்டு ஒன்றியக் குழு  உறுப்பின ராக மார்க்சிஸ்ட் கட்சியின் வேட் பாளர் மாதம்மாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 405 வாக்குகள் அதிகம் பெற்றார்.இ இதேபோல் ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் கோடியள்ளி ஊராட்சி மன்ற தலைவராக மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் கமலா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட் பாளரை விட 735 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொன்னகுட்டள்ளி ஊராட்சி மன்ற தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் லட்சுமி தன்னை  எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 485 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 16ஆவது வார்டு  பெரியாம்பட்டி ஒன்றிய கவுன்சி லருக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி. உதயன் 2,436 வாக்குகள் பெற்ற நிலையில் 245 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றுள்ளார். தரும புரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் அரூர் ஒன்றியம் எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி கம்மாளம்பட்டி வார்டு  உறுப்பினராக பழனி, எல்லப்புடை யாம்பட்டி வெங்கட்டேசன், கெளாப்பாறை ஜெய்சங்கர் ஆகி யோர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். கடத்தூர் ஒன்றியம் கோபி செட்டிப்பாளையம் ஊராட்சி வார்டு  உறுப்பினராக வி.சகுந்தலா ஆகி யோர் வெற்றிபெற்றனர். 

கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங் கரை ஒன்றியம் 20ஆவது வார்டு காட்டேரி ஊராட்சி ஒன்றிய கவுன்சி லருக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோவிந்த சாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் 1055வாக்குகள் பெற்று 43வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். 

 

;