tamilnadu

img

பல்லடத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.2 - பல்லடம் தொலைபேசி நிலையம் முன்பாக செவ் வாயன்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்பளம் தராமல் இழுத்தடிப்பது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீர்குலைக்க முயல்வது ஆகிய நடவ டிக்கைகளைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்திற்கு எம்.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட உதவிச் செயலாளர் எம்.காந்தி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சண்முகம், மாவட்டப் பொருளாளர் கல்யாணராமன், ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த முருகசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கிளைச் செயலாளர் என். நாகராஜன் நன்றி கூறினார்.