tamilnadu

img

நாட்டின் வளர்ச்சிக்கு கேடான கட்சி பாஜக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு

கோவை, டிச. 1–  பாஜக-வின்  ஆறாண்டு கால ஆட் சியில் இந்த நாட்டை எவ்வளவு சீர ழித்துள்ளது என்பது தற்போது ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெளிப்படுத்துகிறது என தமிழக காங் கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழ கிரி தெரிவித்தார். கோவை வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி  விமான நிலையத்தில் சனியன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகை யில், பாஜக அரசின் தவறான பொரு ளாதார கொள்கையினால் கடந்த 6 ஆண்டுகளில் மிக மோசமான பொரு ளாதார நிலையை நாடு சந்தித்துள்ளது. ஆறாண்டு காலத்தில் இந்த நாட்டை எவ்வளவு சீரழித்துள்ளது என்பதை இந்த பொருளாதார கொள்கையே சாட்சியாகும். பாஜக-வின்  பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று பேசி உள்ளார்.  அப்படியென்றால் காந்தி யார் என கேள்வி எழுகிறது. ஆகவே, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு, கேடான கட்சி பாஜக என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.  குறைந்தபட்ச பொருளாதார வழி தெரியாமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் படுத்திய மோடியால் இந்த நாடு வீழ்ச் சியை கண்டு வருகிறது.  மேலும், மராட்டியத்தில் சமீபத் தில் பாஜக எப்படி ஆட்சி அமைத் தது என்பதை மக்கள் புரிந்து கொண் டார்கள். குடியரசு தலைவர், ஆளுநர் கள் தான் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய தவறிய ஒன்றை உச்சநீதி மன்றம் செய்திருக்கிறது. ஆளுநரை மூன்று மணிக்கு எழுப்பி ஆட்சி அமைக்க வேண்டி நிர்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?  என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழக உள்ளாட்சி தேர் தலில் மறைமுக தேர்தல் வேண்டாம்,  நேரடி தேர்தல் தான் வேண்டும்.  உள் ளாட்சி தேர்தலில் குளறுபடிகள் இருப் பதால்தான் திமுக  வழக்கு தொடர்ந்தி ருக்கிறது. இதேபோல அதிமுகவின் தோழமை கட்சிகளும் வழக்கு தொடர்ந் திருக்கிறது என்றார்.