tamilnadu

உண்மைக்கு மாறாக பேசும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை, ஏப்.16-செய்த தவறை ஒப்புக்கொண்டு வாக்கு கேட்பது என்பதற்கு மாறாக,உண்மைக்கு மாறாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுவது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை தொழில்துறை அமைப்புகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.இதுதொடர்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் (டேக்ட்) சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ், கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க(கோப்மா) தலைவர் மணிராஜ்,தமிழக கிரில் தயாரிப்போர் நலசங்கத்தின் (கோவை மாவட்டம்) தலைவர் சாகுல் அமீது ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,17 ஆவது மக்களவை தேர்தலில்வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகிய திட்டங்கள் வாக்காளர்கள் மத்தியில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். முன்னதாக, தமிழக சட்டமன்றத்தில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு குறுந் தொழில்கள்மூடப்பட்டும், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனதொழில்துறை அமைச்சர் அறிக்கைமுன்வைத்தார். இந்த எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும் என்பதேநிதர்சனமான உண்மை. இதன்காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாட்களில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை மத்திய அரசின் நடவடிக்கையால் சிறுகுறு தொழில்துறை கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளதை ஆவேசமாக எடுத்துரைத்தார். 


ஆனால், இப்போது அதிமுக மற்றும் பாஜக ஒரே அணியில் சேர்ந்திருப்பதால் மேற்கண்ட உண்மைகளை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டிவரிவிதிப்பு நடவடிக்கையால் கோவையில் உள்ள சிறுகுறுந்தொழில்கள் மீளவே முடியாத அளவிற்கு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டு ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இது ஆளும் ஆட்சியாளர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கோவை பாஜகவேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஜிஎஸ்டியால் நெருக்கடி ஏற்பட்டது ஓரளவு உண்மைதான்என்றும், அடுத்த ஆட்சியில் சரிசெய்துவிடுவோம். 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்போம் என்று வாக்குறுதியளித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடியும், ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் கொண்டு வரப்படும்என அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இப்போது பாஜக வேட்பாளர் ஜிஎஸ்டியால் எந்த தொழிலும் பாதிக்கவில்லை, வளர்ச்சிதான் அடைந்திருக்கிறது. மூடப்பட்ட தொழிற்கூட உரிமையாளர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்றுஐக்கியமாகிவிட்டார்கள் எனஉண்மைக்கு மாறாக நேற்றையதினம் நடைபெற்ற (ஏப்.15) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக தொழில் செய்பவர்கள்தான்ஜிஎஸ்டியால் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக இப்படி இவர்கள் மாற்றி, மாற்றி பேசுவது தொழில் முனைவோர்களான எங்களுக்கு பெரும் வேதனையடையச் செய்கிறது. செய்த தவறை ஒப்புக்கொண்டுவாக்கு கேட்பது என்பதற்கு மாறாக, தினம் தினம் மாற்றி மாற்றி பேசுவது தொழில்முனைவோர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையின்மையை உருவாக்குகிறது. உண்மைக்கு மாறாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுவது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிறுகுறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



;