காவல்துறை தலையீட்டுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு
திருப்பூர், ஜூலை 31- பனியன் கம்பெனி தொழிலாளர் சம்பளப் பிரச்சனை தொடர்பான சர்ச்சையில் காவல்துறை தலையீடு செய்ததற்கு பனியன் தொழிற் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவல கத்தில் புதனன்று அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் ஏஐடியுசி மாவட்டசெய லாளர் என்.சேகர், சிஐடியு பனியன் சங்கத் தலைவர் சி.மூர்த்தி, பொது செயலாளர் ஜி.சம்பத், எல்பிஎஃப் பொருளாளர் சு.பூபதி, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் ஏ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்து சாமி, எம் எல் எப் பொதுசெயலாளர் எம்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப் படையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் அனுப்பர்பாளையம் காந்தி ரோட்டில் இயங்கிவரும் சுஹானா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவ னத்தில் பணியாற்றி வந்த ஆறு தொழிலாளர்கள் முறையாக சம்பளம் வழங்காததால் தாமாகவே வேலையிலிருந்து விலகி விட்டனர். அவர்களுக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை பல முறை நிர்வாகத்திடம் கேட்டும் கொடுக்காத காரணத்தால் அவர்கள் உறுப்பினர்களாக உள்ள சிஐடியு சங்கத்தில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சங்கத்தின் பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி நிர்வாத்தோடு ஒரு மாத காலமாக நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். நிர்வாகம் கடந்த 30 ஆம் தேதியன்று நேரில் வந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ளு மாறு தெரிவித்தனர். அதன்படி தொழிலாளர்கள் சங்க பொறுப் பாளர்கள் ஏ.ஈஸ்வரமூர்த்தி, பாண்டியராஜ் ஆகியோர் உடன் சென்றனர். கம்பெனிக்குச் சென்ற போது அவர்களை கம்பெனிக்குள் அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி விட்டனர். தங்களை நேரில் வரச் சொல்லிவிட்டு வெளியே நிற்க வைத்திருப்பது சரியல்ல என்று வாதாடிய பிறகு அவர்களை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்று சம்பளம் கேட்ட போது மூன்று பேருக்கு சம்பளம் தரமுடியாது என்றும் ஒருவருக்கு சம்பளத்தில் 8 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து தான் தருவோம் என்று சொன்ன தால், தொழிலாளர்கள் எங்களை மாதக்கணக்கில் அலையவிட்டு இப்போது இப்படி சொல்வது நியாயமல்ல என்று கம்பெனி கேட்டில் அமர்ந்து கொண்டு சம்பளம் கொடுத்தால்தான் போவோம் என்று தெரிவித்துள் ளனர்.
உடனே காவல்துறை தலை யிட்டு காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என தெரிவித்ததால் சங்க நிர்வாகிகள் இரண்டு பேர் காவல் நிலையம் சென்றனர். அப்போது அதிரடிப்படை உட்பட ஆய்வாளர் தலைமையில் கம்பெனிக்கு வந்து தீவிரவாதிகளை கைது செய்வது போல் ஆறு தொழிலாளர்களையும் கைது செய்வதாக மிரட்டி அச் சுறுத்தி காவல்நிலையம் அழைத்து வந்தனர். இந்த நடவடிகை மூலம் சம்பளம் தராமல் ஏமாற்றும் நிர்வா கத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது கடும் கண்டனத் திற்கு உரியது.மேலும் காவல் துணை ஆணையர் சம்பளப் பிரச் சனை உட்பட எந்த தொழிலாளர் தாவாவிலும் தொழிற்சங்கம் தலை யிடக்கூடாது என்று மிரட்டுவது தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். மேலும் எந்தவொரு தொழி லாளர் பிரச்சனை ஆனாலும் காவல் துறையில்தான் புகார் அளிக்க வேண்டும் என்றும், தொழிற் சங்கம் தலையிடக் கூடாது என்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை மிரட்டி யுள்ளார். இது போன்ற தொழிற் தாவாவில் காவல்துறை தலையீடு செய்வது காவல்துறையின் அதி கார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்றும், இத்தகைய அணுகுமுறை சரியானதல்ல என்றும் சுட்டிகாட்ட விரும்புகிறோம். லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றும் தொழில் நகரமான திருப்பூரில் தொழில் உறவு மற்றும் தொழில் அமைதியை பாதுகாப்பதில் தொழிற்சங்கங்கள் பங்கு முக்கியமானதாகும். இத் தகைய சூழலில் தொழிற்சங்கங்கள் காவல்துறையின் அதிகாரத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்று சொல்வதை ஏற்க இயலாது. காவல் துறையின் இது போன்ற அணுகு முறை திருப்பூர் நகரத்தின் தொழில் அமைதியை பாதிக்கும் என்பதால் தாங்கள் தலையிட்டு இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கை களில் காவல்துறையினர் ஈடு படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து தொழிற் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.