tamilnadu

வாழைக்கு மானியம்: விவசாயிகளுக்கு அழைப்பு

திருப்பூர், நவ. 10- அவிநாசி வேளாண்மைத்துறை சார்பாக கிழங்கு  வாழை மற்றும் திசு வாழைக்கு மானியங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  கிழங்கு வாழைக்கு மானியமாக ஒரு ஹெக்டருக்கு  (2.5ஏக்கர் )ரூ.26 ஆயிரத்து 250ம், திசு வாழைக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.37 ஆயிரத்து 500ம், பின்னேற்பு மானிய மாக வழங்கப்படுகிறது. இதற்கு கிழங்கு வாழைக்கு உர பில் ரூ.15 ஆயிரம் ஜிஎஸ்டியுடன் மற்றும் மருந்து பில்  ரூ.25 ஆயிரம்  ஜிஎஸ்டியுடனான ஆவணங்களை விவசாயி கள் அளிக்க வேண்டும். திசு வாழைக் கன்றுகளுக்கு மட்டும் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் தொகையை செலுத்தி கன்றுகளை பெற்றுக்கொண்டு பின்பு அத்தொகை வங்கி கணக்கில் மானியமாக வழங்கப்படும்.  நேந்திரன், குவிண்டால் நேந்திரன், செவ்வாழை மற்றும் இதர வாழை  பயிர்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் வாழை பயிர் சாகுபடி சான்றிதழ் போதுமானது. விண்ணப்பத்து டன் சிட்டா, அடங்கல் (கீழ் பகுதியில் தற்போது நடவு செய்யப்பட்டு இருக்கும் வாழையின் விபரம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்), ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், போட்டோ- 2 ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு அவிநாசி உதவி வேளாண்மை அலுவலர் ர.வினோத்குமார், அலைபேசி எண்: 98422 0 8001ல் தொடர்பு கொள்ளலாம்.