ஈரோடு,டிச 18- ஆழ்துளை கிணறு மரணத்தை தடுக்க வலியுறுத்தி ஈரோட்டில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் வாகன பிரச்சார விழிப்பு ணர்வு பயணம் மேற்கொண்டார். இதுகுறித்து பிரச்சாரம் மேற்கொண்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்ப வர் கூறியதாவது, கரூர் மாவட்டத்தை சேர்ந்த நான், காவல்துறையில் பணி செய்து ஓய்வு பெற்றுள்ளேன். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கையை காக்க வேண்டும் என வலியு றுத்தி பல்வேறு விழிப்புணர்வு பயணங் களை மேற்கொண்டுள்ளேன். தற்போது, பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு போன்றவைகளை பாதுகாப் பாக மூடியும், தடுப்பு சுவர் அமைத்தும், மனி தர்கள் உட்பட உயிரின மரணத்தை தடுக் கும் நோக்கில் விழிப்புணர்வை மேற்கொண் டுள்ளேன். கடந்த, நவ. 25 ஆம் தேதி முதல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் என 13 மாவட்டங்களில் வாகன விழிப்பு ணர்வு பயணம் மேற்கொண்டு, 14-வதாக ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறேன். பொதுமக்களும், பெற் றோர்களும், இதுபோன்ற பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு, ஆபத்தான நீர் குழிகள் இருந்தால் அதனை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்காக தமிழ கம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங் களுக்கும், இரு சக்கர வாகனப் பிரசாரம் மேற் கொள்ளதாகவும் தெரிவித்தார்.