tamilnadu

img

அமராவதி அணைக்கு நீர் வரத்து இல்லை

உடுமலை, ஜூலை 12- அமராவதி அணைக்கு நீர் வரத்து  இல்லாததால் கடந்த மாதம் பாசன நீர்  விநியோகம் செய்யப்பட வேண்டிய  நிலையில், இது வரை விநியோகிக்கப் படவில்லை. இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங் களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர, கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பகுதியில் சுமார் 7  ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீரும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அமராவதி அணையி லிருந்து கல்லாபுரம் வாய்க்காலில் ஜூன் முதல் மார்ச் வரை தண்ணீர் திறந்து விடப் படும். தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை பெய்யும் என்பதால், அணையில் நீர் மட்டம் உயர்ந்து காணப் படும். இதனால் முதல் போக சாகுபடியை விவசாயிகள் துவங்குவது வழக்கம். இதை யடுத்து டிசம்பரில் 2ம் போக சாகுபடி நடை பெறும். கடந்த ஆண்டு அணை நிரம்பியதால் குறித்த காலத்தில் முதல் போகம் நெல் பயிரிட்டனர். ஆனால் இந்தாண்டு ஜூன் முடிந்தபிறகும், பருவமழை போதிய அளவு  பெய்யாததால் அணைக்கு நீர் வரத்து இல்லை. நீர்மட்டம் குறைவாக உள்ளது. இதில் 90 அடி உயரம் கொண்ட அணையில்,  தற்போது நீர்மட்டம் 33 அடியாக உள்ளது.  ஆனால் கடந்தாண்டு இதே காலக் கட்டத்தில் அணையில் நீர் மட்டம் 60.79  அடியாக இருந்தது. இதனால் விவசாயிகள் தற்போது முதல் போக சாகுபடியை துவங்க  முடியாத நிலையில் உள்ளனர். மேலும்  வயலில் எந்த ஆயத்த பணியும் மேற் கொள்ளாமல் விவசாயிகள் காத்திருக் கின்றனர். அமராவதி அணை மூலம் பல் வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் வழியாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் போதுமான அளவு குடிநீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், ஆண்டுக்கு 3 போகம் சாகுபடி  நடந்து வந்த நிலையில், தண்ணீர் பற்றாக் குறை காரணமாக 2 போகமாக  மாறியது. தற் போது அதற்கும் வழியின்றி, முதல் போகம்  கூட பயிரிட முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. மழை பெய்தால்தான் சாகுபடி துவங்க முடியும் என வேதனையோடு தெரி வித்தனர்.

;