tamilnadu

img

அம்பேத்கர் சிலை உடைப்பு: மறியல்

திருப்பூர், ஆக. 26 – வேதாரண்யத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத் தைகள் கட்சியினர் திருப்பூ ரில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.  நாகை மாவட்டம், வேதா ரண்யத்தில் சட்ட மேதை அம்பேத்கரின் சிலை உடைக் கப்பட்டதைக் கண்டித்து திங்களன்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ் வேந்தன் தலைமையில் ஐந்து பேர் கண்டன முழக்கம் எழுப்பியவாறு திருப்பூர் ரயில் நிலையம் அருகே சாலை மறியல் செய்ய வந்தனர். அவர்களை காவல் துறையி னர் கைது செய்தனர். அவிநாசி அவிநாசியில் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை கட்சி யினர் சார்பில் அவிநாசி வட்டாட்சியர் அலுவல கம் அருகில் சாலை மறியல் செய்ய முயன் றனர். இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி போராட் டக்காரர்கள் சாலையில் அமர முயன்றபோது காவல்துறையினர் அவர் களைத் தரதரவென இழுத்துச் சென்றனர்.  இந்நிலையில் காவல் துறையினருக்கும்,  போராட்டக்கார்களுக் கும்  வாக்குவாதம் ஏற்பட் டது. இறுதியாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க கோரியும் முழுக்கங்கள் எழுப்பி கலைந்து சென்றனர்.