ஈரோடு, ஆக.30- அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண் டனம் தெரிவித்து ஈரோட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்திய அனைவரையும் கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் மாவட்டத் துணை செயலாளர் என்.பாலசுப்பிரமணியம், ஈரோடு தாலுகா செயலாளர் கே.சொங்கப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியம், தமுஎகச மாவட்ட தலைவர் மு.சங்கரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ம.சசி, மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.லலீதா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் துணை செயலாளர் எம்.வினிசா ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் ஈரோடு நகரச் செயலாளர் வி.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.