கோவை, அக். 2 – கோவையில் காந்தி ஜெயந்தி தினத்திற்கு விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள் ளனர். தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியன்று கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து துறையில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதா? என்றும், இந்த தினத்தில் தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கும்பட் சத்தில் உரிய முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா? என் றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தலைமையில் கோவை மாவட்டம் முழுவதும் 103 நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, விடுமுறை அளிக்காத மற்றும் தொழிலாளர்கள் அன்றைய தினம் பணிபுரிய சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு முன்னறிவிப்பு அளிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்கள் 29, உணவு நிறுவனங்கள் 27, மோட்டார் போக்குவரத்து நிறுவ னங்கள் 4 என மொத்தம் 70 நிறுவனங்கள் விதியை மீறி யிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் விளக் கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கள் மீது தொடந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.