tamilnadu

சாமி சிலைக்கு செருப்பு மாலை: பொதுமக்கள் சாலை மறியல்`

பென்னாகரம், ஆக.16- பென்னாகரம் அருகே சாமி சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து மர்ம ஆசாமி களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள கூத்தாபாடி கிராமத்தில்  முனியப்பன் கோவில் உள்ளது. இக் கோவிலுள்ள சாமி சிலைக்கு வியாழனன்று  இரவு மர்ம ஆசாமிகள் செருப்பு மாலை அணி வித்து சிலையின் முகத்தில் பெயிண்ட்டை  ஊற்றி சென்றுள்ளனர். வெள்ளியன்று காலை இதனை பார்த்த  ஊர் பொதுமக்கள்  அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மர்ம ஆசாமி களை உடனடியாக கைது செய்ய வேண்டும்  என வலியுறுத்தி பென்னாகரம்-நாகமரை  சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறை யினர், பொதுமக்களை சமாதானம் செய் தனர். ஆனால் பொதுமக்கள் மர்ம ஆசாமி களை உடனடியாக கைது செய்ய வேண்டும்  என வலியுறுத்தியும், வட்டாட்சியர் சம்பவ  இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறியும் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அங்கு வந்த வட்டாட்சியர் சம்பவ இடத் திற்கு சென்று சிலையை பார்வையிட்டார். சிலையின் மீது அணிவிக்கப் பட்டிருந்த செருப்பு மாலையை அகற்றிய தோடு பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கோயிலை சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை வைத் தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வட்டாட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக, இக்கோவிலை சுற்றி கம்பி வேலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அமைக்கப்பட்டது. இதனால் இரு சமூகத் திற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகம் இந்த சாலையில் செல்ல வழியில்லாமல் முற்றிலுமாக கம்பி வேலி அமைக்கப்பட்டதாக அதிகாரி களிடம் முறையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த கம்பி வேலியை முற்றிலு மாக அகற்றி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழி  செய்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.