tamilnadu

img

சித்த மருத்துவ கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

கோவை, ஜன. 10- கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற சித்த மருத்து வம் குறித்த கண்காட்சியில் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  மூன்றாவது தேசிய சித்த மருத்துவ முகாம் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.இம்முகாமானது சித்த மருத்துவத்தின் நன்மைகள் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.  இந்த முகாம் குறித்து மாவட்ட சித்த மருத்துவர் தனம் கூறுகையில், மாவட்டத்தில் 75 சித்த மருத்துவமனை கள் இயங்கி வருகிறது. சித்த மருத்து வம் குறித்து தற்போது அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு பலர் சித்த  மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள் கின்றனர். புதிதாக வர்ம கலை அறிமு கப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமா னோர் வர்ம சிகிச்சை மேற்கொள்கின் றனர்.  அம்மா மகப்பேறு திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறது.இதில் கருத்தரித்த காலத்தில் இருந்து மகப் பேறு வரை தேவையான அனைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவச மாக ஊட்டசத்து மருந்துகள் வழங்கப்ப டுகின்றன.  அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் வரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு செய்கின்றனர் என்றார். இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மூலிகை செடிகள் பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், முகாமிற்கு வந்தவர்களுக்கு நிலவேம்பு கஷாயம், தூதுவளை சூப்  இலவசமாக வழங்கப்பட்டது. காலை  முதல் நடைபெற்று வரும் இந்த  மருத்துவ முகாமிற்கு ஏராளமா னோர் வந்து சென்றனர். சமீப கால மாக இயற்கை உணவு குறித்த விழிப்பு ணர்வும், டெங்கு போன்ற காய்ச்ச லுக்கு அலோபதி மருத்துவத்தைவிட நிலவேம்பு கசாயம் உடனடியாக பலன் அளித்தது போன்ற காரணங்களால் சித்த மருத்துவத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததை பார்க்க முடிந்தது.

;