மேட்டூர்,டிச.4- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து புதனன்று 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக் கான நீர்வரத்து அவ்வப்போது குறைவதும் அதிகரிப் பதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் செவ்வாயன்று 6300 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதனன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிக ரித்துள்ளது.பரிசல் சவாரிக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே போல் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 7,500 கனஅடியாக இருந்த நிலையில்,8,500 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.