tamilnadu

img

கோவை மருத்துவமனையில் 8 மாத குழந்தை கடத்தல் - இருவர் கைது

கோவை, ஜூன் 13 – கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தையை கடத்தி சென்ற கணவன்- மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வம், செல்வராணி தம்பதியர். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள் ளது.

இந்நிலையில், இரட்டை குழந்தைக ளுடன் வெள்ளியன்று கோவை அரசு மருத்து வமனைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற் காக வந்துள்ளனர். அப்போது, அவர்களி டம் அறிமுகமில்லாத பெண் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். தனக்கு இந்த மருத்துவம னையில் அனைவரையும் தெரியும் என்றும், பிறப்பு சான்றிதழ் உடனே பெற்றுத் தருகி றேன் என்றும்  கூறியுள்ளார். இத்தம்பதியின ரும் இதனை நம்பியுள்ளனர். பின்னர் குழந் தையின் எடையை முதலில் பரிசோதிக்க வேண்டும் என கூறி இரட்டை குழந்தைக ளில் ஒரு குழந்தையை வாங்கிகொண்டு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் குழந் தையுடன் சென்ற பெண் வராததால் அதிர்ச் சியடைந்தனர்.  இதையடுத்து, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் செல்வம் தம்பதியி னர் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, எட்டு பேர் கொண்ட தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டனர். மேலும், மருத்துவமனை மற் றும் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத் தும் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருப்பூரை சேர்ந்த விக்னேஷ், பிரபாவதி தம் பதியினர் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.

திருப்பூரை சேர்ந்த இவர்க ளிடம் குழந்தையை மீட்ட காவல் துறையி னர் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்களுக்கு திருமணமாகி நீண்ட வருடங் களாக குழந்தைகள் இல்லை என்பதால் குழந்தை கடத்தல் அரங்கேற்றியுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் களுடன் வேறு யாரேனும் தொடர்பு உள் ளதா என்றும் காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;