tamilnadu

img

பெண் அதிகாரி ஜாமீன் ரத்துக்கு இடைக்கால தடை

மதுரை:
சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த  திருமகளின்  ஜாமீனை ரத்துசெய்த கீழமை நீதிமன்றஉத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித் துள்ளது..சென்னை வியாசர்பாடி யைச் சேர்ந்த திருமகள் என்ப வர் அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்தார். இவர்  மீது சென்னைமயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோவிலில் புன்னை வனநாதர் சிலை  மாற்றப் பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் திருமகளை காவல்துறையினர்  கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.   கும்பகோணம் கூடுதல் முன்மை நீதித்துறை நடுவர் மன்றம் இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து செப்டம்பர் 9 அன்று கும்பகோணம் கூடுதல் முதன்மைநீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருமகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று  நீதிபதி இளந்திரையன்  முன்பு நடைபெற்றது. அப்போது, மனுதாரரின் ஜாமீனை ரத்து செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், மனுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரணை அதிகாரி பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கு செப்டம் பர் 24ஆம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டது.