tamilnadu

img

பாஜக அலுவலகத்திற்கும் சீனக் குழு வந்து போயிருக்கிறது?

தேசபக்த பாசாங்கு, இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்

காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி!

புதுதில்லி, ஜூன் 26 - எல்லையில், இந்திய - சீன படைகளுக்கு இடையிலான மோதல் தொடர்பாக தங் களுக்கு எழும் சந்தேகங்களை, எதிர்க்கட்சி கள் என்ற வகையில் காங்கிரஸ், இடதுசாரி கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எழுப்பி வரு கின்றன. ஆனால், அவ்வாறு கேள்விகளை எழுப்பும் அனைவருக்கும் பாஜக தொடர்ந்து தேசவிரோத முத்திரை குத்தி வருகிறது. அந்த வகையில், எல்லையில் ஆக்கிர மிப்பு நடந்ததா, இல்லையா? நடந்தது என்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சீனா அத்துமீறவும் இல்லை; ஆக்கிரமிப்பும் இல்லை என கூறியது எதற்காக? 20 வீரர்களின் உயிர்த்தியாகம் ஏன்? என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வியில் ஒன்றுக்கு கூட பாஜக அரசு முறையாக பதிலளிக்கவில்லை. மாறாக, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் சீனாவுடன் கூட்டணி வைத் திருப்பதாக பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. “கடந்த 2005-06-ம் ஆண்டில் சீனா மற்றும் சீன தூதரகம் ராஜீவ் காந்தி அறக்கட்ட ளைக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளதை கண்டு வியப்படைந்தேன். இதுதான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம்” என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.

அவரை பின்தொடர்ந்து, “2009-11இல், இந்திய - சீன தாராள வாணிபத்தை, ‘விரும்பத்தக்கது, எளிதானது, பயன் தரக்கூடியது’ என்று காங்கிரஸ் வர்ணித்தது; அப்படியானால் சீனாவுடனான  தாராள வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்கத்தான், சீனா ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு லஞ்ச மாக நிதி வழங்கியதா என்று மத்திய அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத்தும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், பாஜக தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.  அதில், “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை சரியாக கையாள தெரியாமல், ஒரு பேரழிவிற்கு வழிநடத்தும் பாஜக, அதை திசைத் திருப்ப, காங்கிரஸ் கட்சி,  சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைகோர்த்து  

இந்தியாவின் நலனுக்கு எதிராக செயல்படு வதாக விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது; பாஜக-வின் பாசாங்கு மற்றும் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் இது என்று கருதுகிறேன்” என கூறியுள்ளார். மேலும், “அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் அழைப்பின் பேரில் பிரதி நிதிகள் கலந்துகொள்வது சாதாரணமானது, உலகெங்கிலும் உள்ள ஏராளமான முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமைப் பிரதி நிதிகளுடன் கருத்துப் பரிமாற்றத்தை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. பாஜக-வுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி க்கும் இடையில் இதுபோன்ற கட்சி பிரதிநிதி கள் பரிமாற்றம் ஏதும் இல்லை என்று ஜெ.பி. நட்டா கூறுவாரா? ஜனவரி 2011-இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் அழைப்பின் பெயரில் சீனாவுக்கு பாஜக தலைவர் தலைமையில் குழு செல்ல வில்லையா ? பிப்ரவரி 2015-இல் பாஜக தலைவர் அமித் ஷா சீன அமைச்சர் வாங் ஜியாருவை வரவேற்கவில்லையா ? ஆகஸ்ட் 2019-இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழுவை பாஜக தனது தலைமையகத்தில் வரவேற்கவில்லையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் ஆனந்த் சர்மா எழுப்பியுள்ளார். பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி  இடையிலான இந்த தலைமைப் பரிமாற்ற த்தை காங்கிரஸ் கட்சி எப்போதாவது தேச துரோகமாக குறிப்பிட்டதா?” என்றும் சர்மா வினா தொடுத்துள்ளார்.

;