tamilnadu

img

கொரோனா வைரஸ் பலி...  2-வது இடத்தில் இத்தாலி

ரோம்
சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஜெட் வேகத்தில் பரவியது. தற்போதைய நிலவரப்படி சீனாவில் 3000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், 80,000-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவுக்கு வெளியே 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2-ஆம் கட்ட ஆட்டத்தைத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இத்தாலியில் ஞாயிறன்று ஒரே நாளில் 1492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இத்தாலியில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. 7300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் சீனாவுக்கு வெளியே அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துள்ள நாடு இத்தாலியாகும். அடுத்த 2 இடங்களில் ஈரானும் (194), தென் கொரியாவும் (51) உள்ளன. 

;