tamilnadu

img

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.... சென்னை மண்டலம் 2வது இடம்

சென்னை:
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மண்டலம், 98.95 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுதிய 18,73,015 மாணவ, மாணவிகளில் 17,13,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.46 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகம். மாணவிகள் 93.31 சதவீதமும், மாணவர்கள் 90.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மண்டலத்தில் 99.28 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.95 சதவீத தேர்ச்சியுடன் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. 98.23 சதவீத தேர்ச்சியுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தை பிடித்தது. கவுகாத்தி மண்டலம் 79.12 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது.சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் சென்னை மண்டலம் 96.17 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.