tamilnadu

img

நமது பொருளாதாரம் தேக்கத்தில் இருக்கும் நேரம் இது....... சீன வர்த்தக புறக்கணிப்பு இந்தியாவுக்கு உதவாது

கொல்கத்தா:
“பொருளாதாரத்துறையில் மற்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டும், மாறாக, எந்தநாட்டுடனும் வர்த்தகத்தை துண்டிப்பதும், கதவுகளை மூடுவதும் இந்தியாவுக்கு உதவாது” என்று நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

லடாக் எல்லையில், இந்திய - சீன ராணுவத்திற்கு ஏற்பட்ட மோதல், அதில் 20 இந்தியராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கம் இந்தியாவில் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப் படுகிறது.சீனப் பொருட்கள் புறக்கணிப்பு பற்றிமத்திய அரசு வெளிப்படையாக உத்தரவு எதையும் பிறப்பிக்காவிட்டாலும், அமைச்சர்கள் தொடர்ந்து அதைப்பற்றி பேசி வருகின்றனர். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம்போன்ற மாநிலங்களில் சீன நிறுவனங்களுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், “கோவிட் சகாப்தத்தில் பொருளாதார மீட்பு” என்ற தலைப்பில், கொல்கத்தாவில் எம்சிசிஐ (The Madras Chamber of Commerce & Industry- MCCI) அமைப்பு என்ற இணையதள கருத்தரங்கத்தில் (webinar) ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ‘இதில், காணொலி மூலம் பங்கேற்று இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி வி. சுப்பிரமணியன் உரையாற்றியுள்ளார். அதில் அவர்பேசியிருப்பதாவது:

1991-ஆம் ஆண்டுவரை நம் நாடு இறக்குமதி - மாற்று மாதிரியைப் பின்பற்றி வர்த்தகம்செய்து வந்தது. பின்னர் அந்த முறை வழக்கொழிந்து விட்டது. உலகமயமாக்கலுக்குள் சென்றபின் அனைத்தும் மாறிவி்ட்டது.தற்போது இந்தியா மற்ற நாடுகளுடன்போட்டிபோடக்கூடிய வகையில் இருக்கிறது.தொழில், வர்த்தகம், சேவைத்துறை, உற்பத்தி என அனைத்திலும் போட்டி போடுகிறது. இந்தச் சூழலில் (சீனா மட்டுமல்ல) எந்த நாட்டுக்கும் எதிராக கதவை மூடி, அந்தநாடுகளின் உதவியை பெறாமல் போனால்,அது இந்தியாவுக்கு உதவாது.இந்தியா மற்ற நாடுகளுடன் போட்டியிடவேண்டுமே தவிர, மற்றவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள நினைக்கக் கூடாது.இதில் சில விதிவிலக்குகள் உள்ளன. எல்லையில் ஒரு சில நாடுகளுடன் நாம் பிரச்சனையில் இருக்கிறோம். அந்த நாட்டுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன்.

ஆனால், கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இன்னும்இந்தியாவில் குறையவில்லை. உள்நாட்டில்அனைத்து துறைகளிலும் தேவை உயர்ந்துவருகிறது, பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது என்று இப்போதைக்கு கூற முடியாது.மக்கள் தற்போது தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பணத்தை எடுத்து செலவு செய்கிறார்கள், மற்ற செலவுகளை ஒத்திப்போடுவதால், பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் நிலவுகிறது.இந்நிலையில், ‘நோபல் பரிசு’ பெற்றபொருளாதார அறிஞர் ஜோஸப் கூறியதுபோல், நாட்டில் உறுதியற்ற தன்மை நிலவும்போது, பொருளாதாரத்தை உந்தித்தள்ளவும், ஊக்கப்படுத்தவும் நாம் எடுக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் பயனளிக்காது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.“பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டமந்தநிலைக்கு மக்களின் உடல்நிலை சார்ந்த பிரச்சனைதான் முக்கியக் காரணம்;வெளியில் சுதந்திரமாக நடமாடினால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோம்என்ற அச்சத்தால் மக்கள் இன்னும் முழுமையாக வெளியே வர அச்சப்படுகிறார்கள். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகண்டுபிடிக்கும் போது இந்த அச்சம் மறையத் தொடங்கும்” என்று கூறியிருக்கும் சுப்பிரமணியன், குறு- சிறு- நடுத்தர நிறுவனங்களைக் பாதுகாக்க சுமார் ரூ. 3 லட்சம் கோடிஅளவிற்கு பிணையில்லா கடன்கள் வழங் கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும், “கட்டுமானத் தொழில் நிறையவேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் ரியல் எஸ்டேட் துறை பொருளாதாரத்திற்கு முக்கியமானது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

;