tamilnadu

img

வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்!

கொல்கத்தா:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து, எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பும் போதெல்லாம், அதற்கான வாய்ப்பே இல்லை; வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடியெல்லாம் செய்ய முடியாது என்றுபாஜக தலைவர்கள் மறுத்து வந்தனர்.

ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று பாஜக தேசியச் செயலாளரும், அக்கட்சியின் மேற்குவங்க மாநிலத் தலைவருமான ராகுல் சின்கா வாக்குமூலம் அளித்துள்ளார்.மேற்குவங்க இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான் ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்கு உதவியது என்றும்,இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம் அவர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.“தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் கண்காணிக்கிறது. ஆனால் இடைத்தேர்தல்களை நடத்துவதில் மாநில அரசு முக்கிய பங்குவகிக்கிறது. ஆகவே இடைத் தேர்தலில் வெற்றிபெற திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சி எதையும்செய்ய முடியும். குறிப்பாக, மின் னணு வாக்குப் பதிவு (EVM) இயந்திரத்திலும் அக்கட்சியால் எதையும் செய்ய முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மோசமான விளையாட்டை நடத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.காரக்பூர் சாதர் தொகுதியில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த திரிணாமூல் தற்போது வெற்றிபெற்றதற்கு வாக்குப்பதிவு இயந்திர மோசடியே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

;