tamilnadu

img

‘மோடியே, திரும்பிப் போ!’ கொல்கத்தாவை உலுக்கிய போராட்ட முழக்கம்

கொல்கத்தா, ஜன.12- இரண்டுநாள் பயணமாக மேற்குவங்கம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் பேரணி -ஆர்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 17 இடதுசாரி கட்சிகள், மாணவர்,  இளைஞர் அமைப்புகள் சார்பில் கொல்கத்தாவிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கொல்கத்தா  நகரின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங் களும் நடந்தன. தேசிய அளவிலான கோரிக்கைகளை முன்வைத்து பிரத மருக்கு எதிராக இத்தனை பெரிய எதிர்ப்பு இயக்கம் இதுவரை நடந்ததில்லை. ‘மோடியே திரும்பிப்போ, வேண்டாம் என்ஆர்சி’ போன்ற முழக்கங்களுடன் மோடிக்கு எதிரான இந்த இயக்கம் நடைபெற்றது. விமான நிலையம், விஐபி சாலை, ஜாதவ்பூர், கோள் பார்க், ரெய்சா கோர்ஸ்  உள்ளிட்ட இடங்களில், ஆயிரக்கணக் கானோர் அணிவகுத்தனர். இந்த பேரணிகளால் பல மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் தலைமையில் எஸ்பிளனேடில் தடைகளை தகர்த்து ஊர்வலம் முன்னேறியது. பல்வேறு இடங்களிலும் ஊர்வலத்தை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது ஊர்வலத்தில் வந்தவர்கள் மனிதச்சங்கிலி அமைத்தனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பிரசிடன்சி பல்கலை க்கழகம் போன்றவற்றில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பேரணியில் பங்கேற்றனர். ஆசிரியர்கள், ஊழியர் களும் பேரணியில் பங்கேற்றனர்.
பிரதமரின் நிகழ்ச்சியை புறக்கணித்த மம்தா
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமது இரண்டாம் நாள் பயணத்தில், ஞாயிறன்று கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் 150ஆம் ஆண்டு விழாவில் பேசி னார். அப்போது அவர், கொல்கத்தா  துறைமுக கழகத்திற்கு மதவெறி பிடித்த ஜனசங்கத்தின் நிறுவனரான ஷியாமா பிரசாந்த் முகர்ஜியின் பெயரை சூட்டுவ தாக அறிவித்தார். இதற்கு மேற்குவங்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  புறக்கணித்தார். முன்னதாக தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு முதல்வர் செல்லவேண்டி யிருப்பதாக காரணம் கூறப்பட்டது. எனி னும் திரிணாமுல் அரசின் அமைச்சர் களும் கூட பிரதமரின் நிகழ்வில் பங்கேற்கவில்லை. கொல்கத்தா துறைமுகத்திற்கு ஷியாமா பிரசாந்த் முகர்ஜியின் பெயரை  சூட்டியதற்கு கடும் கண்டனம் தெரி வித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் முகமது சலிம் 2014ஆம் ஆண்டு  ஆட்சிக்கு வந்த போது, இந்த நாட்டையே தலைகீழாக மாற்றிவிடு வேன் என்றும் முந்தைய ஆட்சி யாளர்கள் ஆடிய ஆட்டத்தை மாற்றி ஆடுவேன் என்றும் கூறிய பிரதமர்  நரேந்திர மோடி, தற்போது ஆங்காங்கே  சென்று பெயர்களை மாற்றிக் கொண்டி ருப்பதுதான் மிச்சம் என சாடினார். (பிடிஐ)

;