tamilnadu

img

கேரளத்தில் மீண்டு வந்த பொதுத்துறை நிறுவனம்.....

திருவனந்தபுரம்:
கேரள அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான ஆட்டோகாஸ்ட் லிமிடெட்டில் ரயில் பெட்டிகள் தயாரிப்புப்பணிகள் தொடங்கியது. மூடப்படும் விளிம்பு நிலைக்குச் சென்ற இந்த நிறுவனம் கேரள அரசின் பொதுத்துறை பாதுகாப்பு கொள்கையின் விளைவாக மீட்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வேயின் பஞ்சாப் மண்டலத்தில் சரக்கு வேகனுக்குத் தேவையான காஸ்னாப் போகியைக் கட்டுவதற்கான பணி ஆணை கிடைத்துள்ளது.

வடக்கு ரயில்வேயின் போகி கட்டுமானத்திற்கான டெண்டரில் பங்கேற்றதன் மூலம் ஆட்டோகாஸ்ட் இந்த பணிக்கான ஆணையை பெற்றது. இது மூடலின் விளிம்பில் இருந்த நிறுவனத்தின் வலுவான மறுபிரவேசமாகும். ஆட்டோகாஸ்டின் வார்ப்புகளுக்கு கனடாவிலிருந்தும் பணி ஆணை கிடைத்துள்ளது.  ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள ஆட்டோகாஸ்ட்  மூடலின் விளிம்புக்கு சென்றஒரு பொதுத்துறை நிறுவனமாகும். கேரள அரசின் பொதுத்துறைகள் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு வழங்கிய ரூ.40 கோடியைப் பயன்படுத்தி இந்த நிறுவனம் தொழில்நுட்ப மேம்பாட்டை அடைந்துள்ளது. இந்திய ரயில்வேயின் டெண்டரில் பங்கேற்ற ஆட்டோகாஸ்ட் நிறுவனத்துக்கு, ஐந்து சதவீத போகிகளை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

கடந்த வாரம் ஆட்டோகாஸ்ட் தொழிற்சாலைக்கு கேரளதொழிற்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், நிதி அமைச்சர்தாமஸ் ஐசக் உள்ளிட்டோர் வருகை தந்தனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமான ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

;