tamilnadu

img

கேரளம் திரும்பியோரின் மறுவாழ்வுக்கான திட்டம் ‘ட்ரீம் கேரளா’ அமலாக்கத்திற்கு குழுக்கள் அமைப்பு

.திருவனந்தபுரம், ஜுலை 2- கேரளத்திற்கு திரும்பிவரும் புலம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்வையும் மாநிலத்தின் விரிவான வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு ‘ட்ரீம் கேரளா’ என்கிற திட்டத்தை தொடங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. புதிய திட்டங்களை கண்டறிய வும், செயல்படுத்தவும் உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த வர்களின் அறிவும் திறனும் பயன்படுத்தி பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து திட்டம் அமலாக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.  பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநி லங்களில் இருந்தும் திரும்பி வரும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில் முனை வோரின் திறன்களை மாநிலத்தின் எதிர் காலத்துக்கு பயன்படுத்துவதே நோக்கம். பரிந்துரைகளையும் யோசனைகளையும் பொதுமக்கள் வழங்கலாம். ஒவ்வொரு யோசனையும் செயல்படுத்துவதில் நிபுணர்களின் கருத்துகளை பெற இளம் குடிமைப்பணி அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும். யோசனைகளைச் சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் உள்ளது. நிபுணர் குழு திட்டங்களை மதிப்பீடு செய்து அந்தந்த துறைகளுக்கு பரிந்துரைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட யோசனைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் துறைகள் முடிவு செய்யும். இந்த நோக்கத் திற்காக ஒரு வழிநடத்தல் குழு அமைக்கப்படும்
வழிநடத்தல் குழு
முதல்வரை தலைவராக கொண்ட குழுவில் சட்டமன்ற சபாநாயகர், எதிர்கட்சி  தலைவர், அமைச்சர்களான இ.சந்திரசேக ரன், கிருஷ்ணன்குட்டி, ராமச்சந்திரன் கட னப்பள்ளி, ஏ.கே.சசீந்திரன், தலைமைச் செயலாளர், பல்வேறு துறை செயலா ளர்கள் வழிநடத்தல் குழுவின் உறுப்பி னர்களாவர். திட்ட அமலாக்கத்திற்கு முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர். கே.எம். ஆபிர காம் தலைவராக கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும். முரளி தும்மாருகுட்டி, டாக்டர். சஜி கோபிநாத், இன்போசிஸ் இணை நிறுவனர் எஸ்.டி.ஷிபுலால், டெருமோ பென்போல் நிறுவனர் சி.பாலகோபால், சாஜன் பிள்ளை, பைஜு ரவீந்திரன் மற்றும் வி.கே.சி குழுவின் அப்துல் ரசாக் ஆகியோர் குழுவில் இடம்பெறுவர். இந்த திட்டம் 2020 நவம்பர் 15 க்கு முன்பு முடிக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

;